Thursday, March 18, 2021


 *#நம்_வாழ்க்கையை_எப்படி_மாற்றுவது...?


#உளவியல்_பதிவு..‌.

இந்த பூமியில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 90% மக்கள் அடிக்கடி தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி நம் வாழ்க்கையை எப்படி மாற்றுவது?

இதற்கான பதில்களை தங்கள் அறிவின் வாயிலாக, அனுபவங்களின் வாயிலாக, பலரும் பல வடிவங்களில், பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போதும் பலர் பதிவு செய்து வருகிறார்கள். 

இருந்தும் இந்தக் கேள்விக்கான பதில் பலருக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. 

நம் வாழ்க்கையை நம்மால் மற்ற முடியுமா? என்கிற கேள்வி பதில் கிடைக்காமல் செல்லச் செல்ல என் வாழ்க்கையை என்னால் மாற்ற முடியாது. இது தான் என் வாழ்க்கை, இவ்வளவு தான் என்னால் முடியும். என்கிற மனநிலைக்கு பலரும் வந்துவிடுகிறார்கள். 

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். 

"உண்மையில் நமது வாழ்க்கை மாற்றங்கள் நிறைந்ததாகவே உள்ளது ஆனால் நமக்குப் பிடித்த மாதிரியான மாற்றங்கள் நிகழவில்லை என்பது தான் உண்மை."

நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

நமது மன ரீதியான, உடல் ரீதியான, பொருளாதார ரீதியான மாற்றங்கள் அவ்வப்போது நடந்துகொண்டு தானே உள்ளது? 

அப்படி என்றால், ஏன் நமக்குப் பிடித்த மாதிரியான மாற்றங்கள் நம் வாழ்க்கையில் நிகழ்வதில்லை? இது தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையான கேள்வி. 

நமக்குப் பிடித்த மாதிரியான மாற்றங்கள் நம் வாழ்க்கையில் நிகழாமல் இருப்பதற்குக் காரணம் நமக்கு எது பிடிக்கும் என்கிற தெளிவே நம்மிடம் இல்லை என்பதுவே காரணம்.

நமக்கு எது பிடிக்கும் என்பதே நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றால் நம்மால் அதை எப்படி அடைய முடியும்? நமக்குப் பிடித்த மாதிரியான மாற்றங்களை நம்மால் எப்ப நம் வாழ்க்கையில் ஏற்படுத்த முடியும்? 

உண்மையில் உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்கிற கேள்வியை முன்வைத்தால், 

உண்மையில் எனக்கு என்ன பிடிக்கும் என்பதே எனக்குத் தெரியவில்லை நான் என்ன செய்வது? அதை எப்படி நான் கண்டுபிடிப்பது? என்கிற கேள்விகளைத் தான் பலரும் முன்வைப்பர்.  

இது ஒரு அடிப்படை உளவியல் சிக்கல். இதை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.  

நமக்கு இது தான் பிடிக்கும் என்று நம் மனம் கூறும். இல்லை இல்லை நமக்கு இது தான் சரியாக இருக்கும் என்று நமது மூளை கூறும். இன்று நமக்குப் பிடித்த ஒன்று சில நாட்களுக்குப் பிறகு இது நமக்குத் தேவையற்றது என்று கருதி புதிதாக ஒன்றை விரும்பத் தொடங்கும். 

இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு விருப்பமாக நமக்குப் பிடித்தது இதுவா? அதுவா? என்று மாறிக்கொண்டே இருக்கும். 

ஏனென்றால், நமக்கு அனைத்துமே வேண்டும் என்கிற சுயநலம் தான் காரணம். எல்லாமே வேண்டுமெனும் பேராசை தான் காரணம்.  எது சரியென புரிந்துகொள்ள முடியாத அறியாமை தான் காரணம். 

நமக்கு எது வருமோ? நமக்கு எது நல்லதோ? நமக்கு எது தேவையானதாக இருக்குமோ? எந்த ஒன்றால் நமது திறமைகளை வெளிப்படுத்த, வளர்த்துக்கொள்ள முடியுமோ? அந்த ஒன்று தான் நமக்குப் பிடித்த ஒன்றாக, நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாக இருக்கும். 

எந்த ஒன்று நமது வாழ்க்கை முழுவதும் நம்மைத் தொடர்ந்து வருமோ? அந்த ஒன்று தான் நம் வாழ்க்கையை மாற்றக்கூடியது. 

எந்த ஒன்று நமக்கும், நம்மை சுற்றி இருக்கும் மற்ற உயிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமோ? அந்த ஒன்றே நம் வாழ்க்கையை மாற்றக்கூடியது. 

எத்தனை காலங்கள் வீணாகிவிட்டது என்று வருந்தியது போதும். 

இனி ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு அந்த ஒன்றை மட்டும் தேடுங்கள். அந்த ஒன்றால் மட்டுமே அனைத்து விதமான மாற்றங்களும் நம் வாழ்க்கையில் நடைபெற உள்ளது என்வே,

அந்த பொறுப்பை உணர்ந்து, மிகவும் பொறுமையாக, நிதானமாக உங்கள் இலக்கை தேர்ந்தெடுங்கள். அந்த ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அதுவே வாழ்க்கையாக, வாழ்க்கை மாற்றங்களாக அமையும், அப்படி அதை அமைத்துக் கொண்டு அபரிமிதமாக வாழுங்கள். அதற்கு என் மனமார்ந்த அன்பும், வாழ்த்துக்களும்.

No comments:

Post a Comment