Friday, March 19, 2021

 (தெரிந்து கொள்ளலாமா?..)

(தர்ம சாஸ்திரம்..)

(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

(பகுதி −16..)

216. சமித்துக் குச்சிகளை மொத்தமாக ஹோமத்தீயில் இடக்கூடாது. அவற்றை ஒவ்வொன்றாகவே இடுவதே சரியான முறையாகும்.

217.ஹோமத்தீயில் உபயோகிக்கப்படுகின்ற மரக்கரண்டிகள், அதற்காகக் குறிக்கப்பட்டுள்ள மரங்களிலிருந்தே செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்..

கடையில் விற்கின்ற மரக் கரண்டிகளைக் கொண்டு ஹோமத்தைச் செய்யக் கூடாது.

218.கோயில்களில் பலிப்பீடத்திற்கும் மூலஸ்தானத்திற்கும் இடையே நமஸ்கரிக்கக் கூடாது.

219. கோயிலில் சந்நிதிக்கு முன்பாகவும் ப்ராகாரங்களிலும் எதையும் சாப்பிடக்கூடாது.

220. சில ஜோதிடர்கள் கூறுவதைக் கேட்டு, நவக்ரஹங்களை அப்ரதக்ஷிணமாக வலம்வரக் கூடாது. நவக்ரஹங்களை ப்ரதக்ஷிணமாக வலம் வருவதே நன்மை பயக்கும்.

221. அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப் படுகின்ற பால், தயிர், தேன், பழச்சாறு, இளநீர் போன்றவற்றை உட்கொள்ளக்கூடாது.

அபிஷேக சந்தனத் தீர்த்தத்தை மட்டும் சிறிது உட்கொள்ளலாம்.

222.விஷ்ணு ஆலயங்களில் முதலில் தாயாரை நமஸ்கரித்துவிட்டே, பெருமாளை நமஸ்கரிக்க வேண்டும்.

223. சிவாலயங்களில் சிவனை வணங்கியபிறகே, அம்பாளை வணங்க வேண்டும்.

224. கற்பூரத்தை இரண்டு கைகளாலும் பக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும்.

225.ஒரு கையின் மேல் ஒரு கையை வைத்தே, பெருமாள் கோயில்களில் தீர்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

226. கோயில்களை ப்ரதக்ஷிணம் வரும்போது, நிர்மால்யம்  செய்த புஷ்பங்களை மிதிக்கக் கூடாது.

227. அர்ச்சகரைத் தவிர மற்ற எவரிடமிருந்தும் விபூதி, குங்குமத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

228. நீராடாமலும், ஈரத்துணியுடனும் கோயிலுக்குள் நுழையக் கூடாது.

229. கோயிலில் கொடுக்கப்படுகின்ற தீர்த்தத்தை முழுவதும் உட்கொள்ள வேண்டும்..

சிறிதளவு எடுத்துக்கொண்டு, மீதியைக் கீழே விடுவது மிகவும் பாபமான செயலாகும்.

230.தெய்வ விக்ரஹங்கள் தெருக்களில் ஊர்வலமாக வரும்போது, அவற்றை நமஸ்கரிக்கலாம். ஆனால், வலம்வரக் கூடாது.

(வளரும்..)

No comments:

Post a Comment