Sunday, March 21, 2021


 சித்தர் சிவவாக்கியரின்!!


பாடல்:0️19.


╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗

   ★·.·´ பகிர்வு:`·.·★

    அன்பேசிவம் 🔥        

╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝Jk.


அண்டவாசல்ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்.

ஆறிரண்டு நூர்கொடியான வாசல் ஆயிரம்.


இந்த வாசல் ஏழை வாசல் ஏக போகமான வாசல்.

எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் கணவல்லரோ.


பொருள் :-


இவ்வுலகத்திற்கும் பிற உலகங்களுக்கும் ஆயிரமாயிரம் வழிகள் வாசல்களாக அமைந்திருக்கின்றது.


எண் சாண் உடம்பு எண்ணாயிரம் கோடி உயிர்களிலும் கோடிக்கணக்கான வாசல்கள் கொண்டு இப்பூமியில் இயங்கி வருகின்றது.

இதிலே இறைவன் பத்தாவது வாசலிலிருந்து உலாவுகின்றான்.


இந்த வாசல் ஏழை வாசலாகவும், ஏகமாகி நின்று இறை இன்பம் கிட்டும் வாசலாகவும் எளிமையாக எல்லோரிடமும் மறைவாக இருக்கின்றது.


இந்த பத்தாவது வாசலை அறிந்து யோகா ஞானத்தால் அவ்வாசலின் பூட்டைத் திறந்து எம்பிரானாகிய ஈசன் இருக்கும் வாசலை யாவர் காணவல்லவர்கள்.


🙏திருச்சிற்றம்பலம்🙏


சித்தர் சிவவாக்கியரின்!!


பாடல்:0️20.


╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗

   ★·.·´ பகிர்வு:`·.·★

    அன்பேசிவம் 🔥       

╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝Jk.


சாம நாலு வேதமும் சகல சாத்திரங்களும்.

சேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர்.

கம நோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்.

ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே.


பொருள் :-


காலம் தவறாது நான்கு வேதங்களையும், சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும், ஒழுங்காகவும்,


மிக அழகாகவும், நன்றாக ஓதி வந்தாலும் சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள்.

தன் உடம்பில் உயிர் இருப்பதையும், அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள்.


தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு.

அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால்.


நம்மில் ஊமை எழுத்தாகி  சூட்சும உடம்பில் இருப்பான் எங்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.


🙏திருச்சிற்றம்பலம்🙏

No comments:

Post a Comment