Thursday, March 18, 2021


 தினமும் செய்ய வேண்டிய ஆன்மீக வழி பழக்கவழக்கங்கள் -2

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் மட்டும் ஆறுமுக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்.

மற்ற அனைவரும் ஐந்துமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது அவசியம்.

கழுத்தில் கட்டப்படும் ருத்ராட்சம் ஆண்கள் தொண்டைக்குழியில் இருக்குமாறு சிகப்புக் கயிற்றில் மட்டும் கட்ட வேண்டும்.

இறக்கும் நாள் வரையிலும் ஒருபோதும் இதைக் கழற்றிவிடக் கூடாது. கயிறு நைந்து போனாலோ, அறுந்து போனாலோ அதிகபட்சமாக ஏழு நாட்களுக்குள் புதுக்கயிற்றில் கட்டிவிட வேண்டும்.

பல பிறவிகளாக சிவவழிபாடு செய்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.

பெண்களும் அணியலாம். மணமானவர்கள், தாலிக்கொடியோடு சேர்த்துக் கொள்ளலாம். மாதவிலக்கிற்கும் இதை அணிவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தாம்பத்தியத்திற்கும் இதை அணிந்திருப்பதற்கும் தீட்டு கிடையாது.

ருத்ராட்சங்களைக் கொண்ட மாலைகள் இருக்கின்றனஒரு ருத்ராட்ச மாலையில் 12,21,51,108 என்ற எண்ணிக்கையில் இருக்கும் ருத்ராட்சமாலைகளில் ஏதாவது ஒன்று அணியவே பலவிதமான சிவநெறிகளை நாம் பின்பற்ற வேண்டும். தனியான ஒற்றை ருத்ராட்சம் அணிய எவ்வித தடையும் இல்லை

ருத்ராட்சம் அணிந்தப்பின்னர், அசைவம் சாப்பிடக்கூடாது. 

ருத்ராட்சம் அணிந்தவரை நோக்கி மாந்திரீக ஏவல் ஏவினால் அது செயலிழந்து போகும். பேய், பிசாசு அண்டாது. துர்தேவதைகள் நெருங்காது.

No comments:

Post a Comment