Sunday, March 21, 2021


 எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்கினால் அதீத பலன்கள் கிடைக்கும்

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு விதமான கடவுளை வணங்கினால் அதீத பலன்களை பெறலாம். அவர்களுக்கும் அந்த கிழமைக்கும் ஆன தொடர்பு நம்முடைய வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றி தருவதாக சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளது. சில குறிப்பிட்ட நாட்களில் சில வகையான கடவுள்களை வணங்கும் பொழுது நம்முடைய வேண்டுதல் விரைவாகப் பலிப்பதாக நம்பப்பட்டு வருகிறது. எந்த கிழமையில்? எந்த நேரத்தில்? எந்த கடவுளை வணங்கினால் நமக்கு அதிக பலன்கள் கிடைக்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

ஞாயிறு:

ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையில் அல்லது மாலை வேளையில் சூரிய நமஸ்காரம் செய்வது கிமு இரண்டாயிரத்திற்கு முன்பே பழக்கத்தில் இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. சூரிய பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் தான் மந்திரங்களில் தலைமையாக, சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் உதிக்கும் நேரத்தில் சர்க்கரை பொங்கலும், தண்ணீரும் நிவேதனம் வைத்து சூரிய காயத்திரி மந்திரம் உச்சரித்து சூரியனை நோக்கி கிழக்குத் திசையில் வணங்கினால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

அறிவுத் திறன் அதிகமாக வளரும். எதிலும் வெற்றியை அடைய விரும்புபவர்கள் இந்த வழிபாட்டை கட்டாயம் செய்யலாம். பொதுவாக காலை 7 மணிக்கு உள்ளேயும் 5 லிருந்து 6 மணிக்குள்ளும் சூரியன் உதிக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு உடல் முழுவதும் நல்லெண்ணெய் பூசி உட்கார வேண்டும். ஒரு மணி நேரம் இப்படி உட்கார்ந்தால் தீராத நோய்களும் குணம் ஆகி விடுவதாக கூறப்படுகிறது.

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

திங்கள்:

திங்கள் கிழமையன்று சிவ வழிபாடு செய்வதும், சந்திர பகவானை வணங்குவதும் அதிகமான பலன்களை கொடுக்கும். சந்திரன் மனதை தூய்மை செய்யக்கூடியவர் ஆவார். மனதில் தேவையில்லாத குழப்பங்களும், சஞ்சலங்களும் கொண்டிருப்பவர்கள் திங்கள் கிழமையில் சந்திர வழிபாடு செய்யலாம். வசீகரமான தோற்றத்தை கொடுக்கக் கூடியவர் இவர். இளமையுடன் வாழ்வதற்கு திங்கள் கிழமையில் சந்திர வழிபாடு செய்வதும் பலன் தரும். திங்கள் என்பது சோமவாரத்தை குறிக்கிறது. சிவபெருமானுக்கு சோமவார விரதம் இருப்பவர்களுக்கு வேண்டிய வரம் அத்தனையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

""செவ்வாய்:**

சொந்தமாக உங்களுக்கென்று ஒரு வீட்டை வாங்க செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் பகவானை அதாவது அங்காரகனை வழிபட்டால் சொந்த பூமி உண்டாகும். இதனால் தான் அவர் பூமிகாரகன் என்று புகழப்படுகிறார். ஒருவருடைய வாழ்வின் இலட்சியமே அதிகபட்சம் சொந்த வீடு வாங்குவதாக தான் இருக்கும். சொத்து பிரச்சனை, சகோதரர்களுக்குள் பிரச்சனை போன்ற துன்பங்கள் தீரவும் அங்காரகனை வழிபடலாம்.

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

புதன்:

எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறுவதற்கும், சிறப்புற நடைபெறுவதற்கும் விநாயகருடைய அருள் வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகரை முதலில் வழிபட, எல்லாவற்றிலும் சாதக பலன்கள் தருவதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. விநாயகருக்கு உகந்த கிழமை புதன் கிழமை ஆகும். அனைத்து காரியங்களிலும் நல்ல பலன்களை பெற புதன் தோறும் பிள்ளையாரை வழிபடவும். தொழில், வியாபார விருத்தி உண்டாக புதன் கிழமையில் புத பகவானை வழிபடுவது நல்லது. வருமானத்திற்கு அதிபதியாக இருக்கும் புதன் அருள் பெற புதன் கிழமையில் அவருடைய மந்திரங்களை உச்சரித்து, விரதமிருந்து வழிபடலாம்.

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

வியாழன்:

வியாழக்கிழமை குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். செல்வம் மென்மேலும் சேர, வியாழனன்று குபேரனுக்கும் வழிபாடு செய்யலாம். சுபகாரியத் தடை இருப்பவர்கள், திருமணம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு விரதமிருந்து வழிபாடு செய்யலாம்.

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

வெள்ளி:

வெள்ளிக் கிழமை மகாலட்சுமிக்கு உரிய தினமாகும். வெள்ளிக் கிழமையில் மகாலட்சுமிக்கு விளக்கேற்றி பெண்கள் வழிபாடு செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சகல விதமான பிரச்சினைகளும் தீர்ந்து வீட்டில் நிம்மதி ஏற்படும்.

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

சனி:

சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வர பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை, குடும்ப பிரச்சனைகள் தீர்வதற்கு சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து, துளசி மாலை சாற்றி வழிபடலாம். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அசைவம் தவிர்த்து விரதம் இருப்பவர்களுக்கு ஒரு பொழுதும் துன்பங்கள் வருவதில்லை.

No comments:

Post a Comment