Thursday, March 18, 2021


 வெற்றிக்கான_வாழ்க்கை...

╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗

   ★·.·´ பகிர்வு:`·.·★

    அன்பேசிவம் 🔥        

╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝ 

வெற்றி வேண்டுமெனில் முதலில் எதை நோக்கி செல்ல வேண்டும் என்ற தெளிவான இலக்கு, அதற்கான தேடல் அடைய வேண்டுமென்ற   திடமான உறுதி, இலக்கை அடையும் பாதையில் உள்ள சாதக பாதகம் பற்றிய தெளிவு 

நமக்கு திறமை தகுதி இல்லை என்றாலும் ஒரு  செயலை திருப்ப திரும்ப செய்யும் போது நாம் அதில் வல்லமை பெறுகிறோம்.  எனவே பயிற்சி தொடர் பயிற்சி தேவை, விடா முயற்சி செய்ய வேண்டும்..

பயிற்சி +முயற்சி +தொடர்ச்சி = வெற்றி

☀️ வெற்றிக்கான வாழ்க்கை வாழ வேண்டுமெனில் நம்மிடம் உள்ள நல்ல குணநலன்கள் முக்கியம் இந்த உலகில் குணநலன்கள் வைத்து மதிப்பிடப்படுகின்றனர்.       

☀️ உங்கள் பார்வையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் அவை நேர்மறையானவை அல்லது எதிர்மறையானவையா என பார்க்க பழக வேண்டும்.                                  

☀️ நங்கள் பொருளாதார நிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் சரி உங்களுக்கு பிடித்ததை செய்யும் பொழுது உங்களுக்கு வருமானம்,பற்றி பயம் இருந்தாலும் உங்களுக்கு  பிடிப்பதால் மனத் திருப்தி இருக்கும். வாழ்க்கை எங்கிருந்து வேண்டுமானாலும் மாறும்.                                           

☀️ உங்களுடைய வாழ்க்கை வெற்றியாக மாற வேண்டும் எனில் நீங்கள் பிரபஞ்சத்திற்கு கொடுக்க தயாராக இருங்கள் உங்களிடம் எதுவும் இல்லை என்றாலும் சிறிய உயிரினத்திற்காவது உணவிடுங்கள் உங்களுக்கு மனம் சந்தோசப்படும்.                         

☀️நம்முடைய பண்டைய காலத்தில் நீர்நிலையான குளத்தில் குளிக்கும் பொழுது ஒரு கைப்பிடி மண் எடுத்து வெளியே நம்முடைய முன்னோர்கள் போட்டிருப்பர் எதனால் குளம் தூர் வார நம்மால் ஆன பங்கு ஒரு சிறிய உதவி என பிரபஞ்சத்திற்கு செய்தனர்.      

                         

   ☀️உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி உடனே வேண்டும் என்ற மன நிலையை நீங்கள் மாற்ற வேண்டும். பொறுமையாக சரியாக தன்னுடைய குறைகளை நீங்கினால் உங்களால் வெற்றி அடைய முடியும்.        

☀️இதுவரை நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அனைத்திற்கும் நன்றி உணர்வினை வெளிப்படுத்தி கொண்டே இருங்கள். நல்ல மன நிலைக்கு அவை இட்டு செல்லும். ☀️☀️

No comments:

Post a Comment