Friday, March 5, 2021


 ஓம் என்ற மந்திரமும்

அதாவது 

ஓம் என்ற உணர்வும்

அதன் 

சூட்சமமும் இரகசியமும்

     ஓம் என்ற ஒலியே நமக்குள்ளே உயிராய் இருக்கின்றது இதுதான் சித்தர்களின் கருத்து

இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்

     பிராணன் எனும் மூச்சுக் காற்றானது நமது உடலை மட்டுமே ஜீவிக்கும் படியான சக்தியாக இருக்கின்றது இதைத்தான் நாம் உயிர் என்கின்றோம்

   உடலில் உயிர் மட்டும் இருந்தால் போதாது அதில் உணர்வும் இருந்தால் மட்டுமே அது உயிர் என்று ஆக முடியும் 

     உணர்வு இல்லாவிட்டால் உயிர் இருந்தும் இந்த உடலானது வெறும் ஜடமாக தான் இருக்க வேண்டியதாய் இருக்கும்

அப்படியானால்

       இந்த உடல் ஜடம் என்ற நிலையை விட்டு உயிர் என்ற நிலையைப் பெற வேண்டும் அல்லவா...?

      அந்த உணர்வை அதாவது இன்னதாக பிறந்து இருக்கின்றாய் என்ற அறிவை எல்லா உயிர்களுக்கும் எது தருகின்றது என்றால்

      இந்த பிரபஞ்சம் எனும் பெரும் வெட்ட வெளியில் எங்கும் வியாபித்து கொண்டிருக்கின்ற காற்றான சக்தியில் 

      உணர்வாக கலந்து இருக்கின்ற ஓம் என்ற பிரணவ சப்தமே அனைத்து உயிர்களுக்கும் உணர்வெனும் சக்தியைத் தந்து அதுவே சூட்சுமமாய் உயிராகவும் இருக்கின்றது

    ஓம் என்ற பிரணவமே நமக்குள்ளே உணர்வாகவும் சூட்சம உயிராகவும் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டாலும் அதை உணர்ந்து கொள்ள வேண்டுமல்லவா அதற்கும் ஒரு முகாந்திரம் இருக்கின்றது

அது எப்படியென்றால்

      காற்று நமது சுவாசமாக உள்ளே செல்லும் பொழுது ஸோ என்ற சப்தமாய் உள்ளே பிரவேசிக்கிறது

    அதே சுவாசம் வெளியே வரும்

பொழுது ஹம் எனும் சப்தமாய் வெளியில் பிரவேசிக்கிறது

இந்த சப்தம் எதிலிருந்து உண்டாகின்றது எனில்

        காற்றிலே உணர்வாய் கலந்திருக்கும் ஓம் எனும் சொரூபமே இந்த சப்தத்தை உண்டாகின்ற சக்தியாய் இருக்கின்றது

இதை தெரிந்து கொள்வது எப்படி எனில்

    நமது மூச்சிலே ஸோ என்கின்ற சப்தமாய் சுவாசம் உள்ளே செல்கின்றது அதுவே வெளியே வருகின்ற பொழுது ஹம் எனும் சத்தமாய் வெளியேறுகிறது இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

இப்போது ஒரு பயிற்சி முறையை பார்ப்போம்

ஸோ.........................................என்ற 

சப்தத்தை நீளமாக    உச்சரித்துப் பாருங்கள்

ஸோ ....என்ற சப்தம்

ஓ....... என்ற 

ஒலியாய் மாறிவிடும்

அதைப்போல

ஹம்.........................................என்ற

சப்தத்தை நீளமாக    உச்சரித்துப் பாருங்கள்

ஹம்.......என்ற சப்தம்

ம்........என்ற

ஒலியாய் மாறிவிடும்

ஆக

ஸோ. என்ற சப்தத்தில்

ஓ.... என்ற ஒளியே நிலையானதாக இருக்கின்றது

அதைப்போல

ஹம்..... என்ற சப்தத்தில்

ம்..... என்ற ஒளியே நிலையானதாக இருக்கின்றது

        நிலையாக இருக்கின்ற இந்த சப்தங்களின் ஒலியை இணைத்தால் அது ஓம் என்ற பிரணவமாக மாறிவிடுகிறது

     ஓம் என்ற ஒலியே ஸோ ஹம் என்ற சப்தங்களாக மாறி  எங்கும் எப்பொழுதும் எல்லா ஜீவனுக்குள்ளும உயிரான ஒரு பொருளை இருக்கின்றது

அதாவது

    ஓம் என்ற சூட்சமமான பொருளே எங்கும் எதிலும் உயிராய் இருக்கின்றது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நமக்கு புலனாகின்றது

   உயிராய் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான் என்று ஞானம் பெற்றவர்கள் உபதேசம் செய்வதற்கு இதுதான் மூல காரணம்

        காற்றிலே சூட்சுமமாய் உலாவுகின்ற ஓம் எனும் மறைபொருளை எவரொருவர் உணர்கின்றாரோ அவர்களின் அறிவானது விருத்தியாகி பேரறிவு என்ற நிலையை பெற்று விடுகிறது

     இதைத்தான் ஞானிகள் ஞானம் என்று

சொல்லியிருக்கின்றார்கள்

     ஞனம் என்பது எல்லோருக்கும் கிடைக்குமா என்ற கேள்வியும் சந்தேகமும் எப்பொழுதும் வேண்டாம்

நீ எதுவாக இருக்க நினைக்கிறாயோ

அதுவாகவே மாறி விடுவாய்

இதுவே கேள்வி என்ற அச்சத்திற்கும் குழப்பம் என்ற சந்தேகத்திற்கும் பதில்    

தேடினால் கிடைக்காதது ஒன்றுமில்லை

நன்றி

அனைவருக்கும் ஆத்ம நமஸ்காரம்


No comments:

Post a Comment