🟨🟥🟨🟥🟨🟥🟨🟥
🕉️தேசியமும் தெவீகமும்
எனது இருகண்கள்🙏
✶✶⊶⊷⊷❍ 𝑴K ❍⊶⊶⊷✶✶
🟨🟥🟨🟥🟨🟥🟥🟥
அடங்காமல் அலை பாயும் மனதை அடக்கி உன்னை நினைக்கச்செய்வாய்
அலை அலையாக எழும் எண்ணங்களை உன்னிடமே சமர்பித்திடுவேன்
அக்கறையோடு என் குறைகளை கேட்டு அவைகளை நிவர்த்தி செய்திடுவாய்
அற்புதமான வார்த்தைகளால் உன்னை புகழ்ந்து பாடி ஆனந்தம் அடைந்திடுவேன்
அடுக்கடுக்காக சௌபாக்கியங்களை என் வாழ்வில் பொழிந்து அருளினாய்
அல்லல் செய்யும் என் உடல் வலிகளை நீக்கி ஆரோக்கிய வாழ்வு தந்திடுவாய்
அரை நிமிஷ நேரமாவது உனை தவம் செய்யும் த்யான முறையை கற்று தருவாய்
அலைக்கழிக்காமல் என் இதய கோவிலில் எப்போதும் தங்கி அமைதி அளித்திடுவாய்
அயராமல் உனையே ஸ்தோத்திரம் செய்து உன்னருளை வேண்டி நிற்கிறேன்
அம்பிகை மணாளா உனை இசை வடிவில் பாடி மகிழ்வித்திட முயலுகிறேன்
அஞ்சிடும் என் மனதுக்கு ஆறுதல் சொல்லி உன் பாத கமலங்களில் சேர்த்து கொள்வாய் ...
ஓம் நமசிவாய .......
No comments:
Post a Comment