Monday, March 8, 2021


 ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

27  நட்சத்திர  அதி தேவதை  வழிபாடு மற்றும் பரிகாரங்களும்

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

1   ஸ்ரீ சரஸ்வதி தேவி அசுபதி  நட்சத்திரத்தின்  அதி தேவதை;

ஓம் அம் அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவாய நமஹ

அசுபதி  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

     திருத்துறைப்பூண்டி

அருள் மிகு பிறவி மருந்தீஸ்வரர்  திருக்கோவில்

திருவாரூரிலிருந்து  30 கி.மீ.  தூரத்தில்  திருத்துறைப்பூண்டி  உள்ளது. பஸ் ஸ்டேண்டிலிருந்து 1 கி.மீ.  தூரத்தில் கோவில் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

2.   ஸ்ரீ துர்க்கை தேவி  பரணி நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் பம்  பரணி மாஹாளி ஸ்ரீ துர்க்கா  தேவாய நமஹ

பரணி இந்த  நட்ச்த்திரம் அவதரித்த ஸ்தலம்

    நல்லாடை

அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்

மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ.  நெடுங்காடு  வழியாக காரைக்கால்  செல்லும்  வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

ஸ்ரீ அக்னி தேவி கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை

ஓம் கம் கிருத்திகை ஆதிசேசன் ஸ்ரீ அக்னி தேவாய நமஹ

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

3.    கார்த்திகை இந்த நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்

    கஞ்ச நகரம்

அருள் மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

 மயிலாடுத்துறை  பூம்புகார் செல்லும் வழியில் 8.கி.மீ. தூரத்தில் கஞ்சா நகரம் அமைந்துள்ளது.  மெயின்  ரோட்டிலிருந்து   பிரியும்  ரோட்டில் அரை கி.மீ.  சென்றால்  கோயிலை  அடையலாம்.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

4.    ஸ்ரீ பிரம்மா  ரோகிணி  நட்சத்திரத்தின் அதி தேவதை

ஓம் ரோம்  ரோகிணி ஸ்ரீ நாகர் ஸ்ரீ  பிரம்மா தேவாய  நமஹ ரோகிணி  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

     காஞ்சிபுரம்

அருள் மிகு பாண்டவ  தூதப் பெருமாள்  திருக்கோவில்

  காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர்  கோயில்  எதிரில்  உள்ள  சாலையில்  கோயில்  அமைந்துள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

5.    ஸ்ரீ சந்திரன்  மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்  அதி தேவதை

ஓம் ம்ரும் மிருக சீர்ஷம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

    முகூந்தனூர்

அருள் மிகு ஆதி நாராயணபெருமாள் திருக்கோவில்

தஞ்சாவூரிலிருந்து   திருவாரூர் செல்லும்  வழியில் 50 கி.மீ. தூரத்தில் முகந்தனூர் உள்ளது.  இந்த  பஸ்  ஸ்டாப்பிலிருந்து  1 கி.மீ.  தூரம்  சென்றால்  கோயிலை  அடையலாம்

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

6.    ஸ்ரீ ருத்திரன் திருவாதிரை நட்சத்திரத்தின்  அதிதேவதை

 ஓம் ஆம்  திருவாதிரை  ஸ்ரீ  சனீஸ்வரா ஸ்ரீ ருத்திரர் தேவாய நஹ

.திருவாதிரை  இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்

   அதிராம் பட்டினம்

அருள் மிகு அபயவரதீஸ்வரர்  திருக்கோவில்

தஞ்சாவூரிலிருந்து 70 கி.மீ.  தூரத்தி உள்ள பட்டுக்கோட்டை சென்று  அங்கிருந்து  12 கி.மீ.  சென்றால்  அதிராம் பட்டினத்தில் உள்ள அந்த ஆலயத்தை அடையலாம்.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

7.    ஸ்ரீ அதிதி  தேவி  புனர் பூசம் நட்சத்திரன் அதிதேவதை

ஓம் பும் புனர் பூசம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ அதிதி  பகவான் தேவாய நமஹ

புனர் பூசம்  இந்த  நட்சத்திரம்   அவதரித்த ஸ்தலம்

     வாணியம் பாடி

அருள் மிகு  ஆதிதீஸ்வரர்   திருக்கோவில்

வேலூரிலிருந்து  கிருஷ்ணகிரி  செல்லும்  வழியில்   67 கி.மீ.  தூரத்தில் உள்ளது.   பஸ் ஸ்டாண்டிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளா   பழைய  வாணியம் பாடியில் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

8.    ஸ்ரீ குரு  பூசம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் பூம்  பூசம்  ஸ்ரீ மஹா விஷ்ணு ஸ்ரீ  குரு  பகவான்  தேவாய நமஹ

 பூசம்  இந்த நட்சத்திரம்  அவதரித்த திருக்கோவில்

  விளாங்குளம்

அருள் மிகு  அட்சயபுரீஸ்வரர்   திருக்கோவில்

பட்டுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும்  வழியில்   கிழக்கு  கடற்கரை  சாலையில் 30 கி.மீ. சென்றால்  கோயிலை  அடையலாம்.  புதுக்கோட்டையிலிருந்து   பேராவூரணி  வழியாகவும்   விளாங்குளத்தை  அடைய   வழியிருக்கிறது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

9.   ஸ்ரீ ஆதிசேசன்   ஆயில்யம்   நட்சத்திரத்தின்  அதி தேவதை

ஓம் ஆம்   ஆயில்யம்  ஸ்ரீ  ராகு பகவான் ஸ்ரீ ஆதிசேசன்  தேவாய நமஹ

.ஆயில்யம்  இந்த   நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்

       திருவிசை நல்லூர்

அருள் மிகு  கற்கடடேஸ்வரர்  திருக்கோவில்

 கும்பகோணத்திலிருந்து   சூரியனார்  கோவில் செல்லும்  ரோட்டில்  11 கி.மீ.  தூரத்தில் உள்ள  திருவிசை நல்லூர்  சென்று  அங்கிருந்து    பிரியும்   ரோட்டில்  2  கி.மீ.  சென்றால்  கோயிலை  அடையலாம்.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

10.    ஸ்ரீ சுக்கிரன் மகம் நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் மம்  ஸ்ரீ தில்லைக்காளி  ஸ்ரீ  சுக்கிரர்  தேவாய  நமஹ

மகம் இந்த நட்சத்திரம்  அவதரித்தன் ஸ்தலம்

விராலிப் பட்டி விலக்கு

அருள் மிகு  மகாலிங்கேஸ்வரர்  திருக்கோவில்

  திண்டுக்கல்லிருந்து  நத்தம் செல்லும்  ரோட்டில்  10 கி.மீ.  தூரத்தில்  விராலிப்பட்டி உள்ளது.  இங்கிருந்து  2 கி.மீ. மினி பஸ்ஸில் சென்றால்  கோயிலை  அடையலாம்.  ஆட்டோ  வசதியும் உண்டு.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

11.    ஸ்ரீ  பார்வதி   தேவி  பூரம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் பூம் பூரம்  ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ  பார்வதி  தேவாய நமஹ

பூரம்  இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம் 

   திருவரங்குளம்

அருள் மிகு  ஹரிதீர்த்தேஸ்வரர்  திருக்கோவில் 

புதுக்கோட்டையிலிருந்து  பட்டுக்கோட்டை  செல்லும்  வழியில்  7 கி.மீ.  சென்றால் வரும்  திருவரங்குளம் என்னும்  ஊரில்  ஆலயம் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

12.    ஸ்ரீ சூரியன் உத்திரம் நட்சத்திரத்தின் அதிதேவதை

ஓம் உம் உத்திரம் ஸ்ரீ வாஞ்சியம்மன்  ஸ்ரீ  சூரிய பகவான் தேவாய நமஹ


உத்திரம் இந்த நட்சத்திரம்  அவதரித்த  ஸ்தலம்

  இடையாற்றுமங்கலம்

திருச்சி சத்திரம்   பஸ் ஸ்டேண்டிலிருந்து  22 கி.மீ.   தூரத்தில் உள்ள   லால்குடி  சென்று  அங்கிருந்து   5 கி.மீ. தூரத்திலுள்ள   இடையாற்று  மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

13.     ஸ்ரீ சவிதா  தேவி  ஹஸ்தம்  நடசத்திரத்தின்  அதிதேவதை

ஓம்  ஹம் அஸ்தம்  ஸ்ரீ  ராஜ துர்க்கை  ஸ்ரீ  சவிதா  தேவி  தேவாய  நமஹ

ஹஸ்தம்  இஎத  நட்சத்திரம்  அவதரித்த  ஸ்தலம்

    கோமல்


அருள் மிகு  கிருபா கூபாரேஸ்வரர்  திருக்கோவில்

கும்பகோணத்திலிருந்து  மயிலாடுதுறை  செல்லும்  வழியில்  உள்ள குத்தாலத்திலிருந்து   பிரியும்  ரோட்டில்  8 கி.மீ.  தூரத்தில்  கோமல் ஊரில்  உள்ளது.  குத்தாலத்திலிருந்து   பஸ் ஆட்டோ  வசதி உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

14.     ஸ்ரீ துவஷடா  புவனேஸ்வரி  சித்திரை நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் சிம் சித்திரை ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ புவனேஸ்வரி தேவாய நமஹ

   குருவித்துறை

அருள் மிகு  சித்திரை ரத வல்லப பெருமாள் திருக்கோவில்

மதுரையிலிருந்து  23 கி.மீ.  தூரத்திலுள்ள   குருவித்துறைக்கு  மதுரை  பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து  பஸ் உள்ளது.  குருவித்துறையிலிருந்து   3.கி.மீ.  தூரத்தில் உள்ளது.   வியாழன், பெளர்ணமி   தினங்களில்   கோயில் வரை பஸ்கள் செல்லும்   மற்ற  தின்ங்களில்  ஆட்டோவில்  செல்ல வேண்டும்.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

15.     ஸ்ரீ வாயு  சுவாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் ஸ்வாம் ஸ்வாதி  ஸ்ரீ  சனிபகவான்  ஸ்ரீ  வாயு  பகவான்  தேவாய  நமஹ

சுவாதி இந்த நட்சத்திரம் அவதரித்த  ஸ்தலம்

  சித்துக்காடு

 அருள் மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோவில்

பூந்தமல்லியிலிருந்து  தண்டூரை  என்னும்  ஊருக்குச் செல்லும்  வழியில்  8 கி.மீ. தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம்  உள்ளது.  குறித்த  நேரத்தில்  மட்டுமே  பஸ் உண்டு  என்பதால்   பூந்தமல்லியிலிருந்து  வாகனங்களில்  சென்றும் திரும்பலாம்.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

16.    ஸ்ரீ முருகன்  விசாகம் நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் விம் விசாகம் ஸ்ரீ வன துர்க்கை  ஸ்ரீ முருகபகவான் தேவாய நமஹ

. விசாகம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

    திருமலைக்கோவிலை

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில்

மதுரையிலிருந்து  155 கி.மீ. தொலைவிலுள்ள செங்கோட்டை  சென்று  அங்கிருந்து 7 கி.மீ. தூரத்திலுள்ள்  திருமலைக்கோவிலை  பஸ் மற்றும்  வேன்களில்  அடையலாம்.  இவ்வூரைச் சுற்றி  பிரபல்  ஐயப்ப  ஸ்தலங்களான  ஆரியங்காவு,  அச்சன் கோவில், குளத்துப்புழை,  ஆகியவை உள்ளன.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

17.    ஸ்ரீ லட்சுமி தேவி  அனுசம் நட்சத்திரத்தின்  அதிதேவதை  

ஒம் அம் அனுசம்  ஸ்ரீ  முகாம்பிகை  ஸ்ரீ  அஷ்டலட்சுமி தேவாய நமஹ

அனுஷம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

   திருநின்றியூர்

அருள் மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில்

மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி  செல்லும்  வழியில்  7 கி.மீ. தூரத்தில் திருநின்றியூர்  என்னும் ஊரில்  இத்தலம்  அமைந்துள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

18.     ஸ்ரீ இந்திரன் கேட்டை  நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் ஜேம் கேட்டை ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ இந்திரன் தேவாய நமஹ

 கேட்டை  இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

  பசுபதி கோயில்

அருள் மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம்  செல்லும்  வழியில்   13 கி.மீ.  தூரத்தில் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

19.    ஸ்ரீ அனுமன் மூலம் நட்சத்திரத்தின் அதிதேவதை

ஓம் மும் மூலம் ஸ்ரீ சொக்கநாதர் ஸ்ரீஅனுமன் பகவான் தேவாய நமஹ


 மூலம்  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

மப்பேடு

அருள் மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில்

சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும்  வழியில் 45 கி.மீ. தூரத்தில்  மப்பேடு  என்ற ஊரில்  இத்தலம் உள்ளது.  [பூந்தமல்லியிலிருந்து  22 கி.மீ.  பேரம்பாக்கம் செல்லும்  வழியில்]

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

20.     ஸ்ரீ வருணன்  பூராடம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் பூம் பூராடம் ஸ்ரீபிரகஸ்பதி ஸ்ரீ  வருண பகவான்  தேவாய நமஹ

 பூராடம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

  கடுவெளி

அருள் மிகு  ஆகாச புரீஸ்வரர் திருக்கோவில்

 தஞ்சாவூரிலிருந்து  [13. கி.மீ திருவையாறு சென்று அங்கிருந்து கல்லணை  செல்லும்  வழியில் 4. கி.மீ. தூரம் சென்றால்  கடுவெளியை  அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

21.    உத்திராடம் நட்சத்திரத்தின் அதி தேவதை வினாயகர்


ஓம் உம் ஸ்ரீ துர்க்காதேவி ஸ்ரீமகாகணபதி தேவாய நமஹ


 அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 

 இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

22.    ஸ்ரீ  விஷ்ணு  திருவோணம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை 

ஓம் திம் திரு ஓணம்  ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ மகா விஷ்ணு   தேவாய நமஹ

திருவோணம் இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

  திருப்பாற்கடலை

அருள் மிகு  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில்

வேலூரிலிருந்து  சென்னை செல்லும்   வழியில்  20 கி.மீ.  தூரத்திலுள்ள  காவேரிப்பாக்கத்தில்  இறங்கி   அங்கிருந்து   பிரியும்  ரோட்டில்  2 கி.மீ.  சென்றால்  திருப்பாற்கடலை  அடையலாம்.  ஆற்காடு  வாலாஜாவிலிருந்தும்  பேருந்துகள்   உள்ளன.  இவ்வூரில்  இரண்டு   பெருமாள்   கோயில்கள்  இருப்பதால்  பிரசன்ன   வெங்கடேச பெருமாள்  எனக்  கேட்டுச்  செல்லவும்.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

23.    ஸ்ரீ  வசுக்கள் அவிட்டம் நட்சத்திரத்தின்  அதிதேவதை

1.தரன்

2.சோமன்

3.அனிலன்

4.ப்ரத்யூஷன்

5.த்ருவன்

6.அஹன்

7.அனலன்

8. ப்ரபஷன்

 ஓம் அம் அவிட்டம்  ஸ்ரீ அஷ்ட்திக்பாலகர்கள் ஸ்ரீ அஷ்டவசுக்கள் தேவாய நமஹ

 அவிட்டம்  இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

   கொடுக்கை 

அருள் மிகு ஞானபுரீஸ்வரர்  திருக்கோவில்

கும்பகோணம் மகாமகக்குளம்  மேற்குக்  கரையிலிருந்து 4 கி.மீ.  தூரத்தில்  கோயில் உள்ளது.   கும்பகோணத்திலிருந்து   தாராசுரம்முழையூர்  வழியாக   மருதாநல்லூர்  செல்லும்  பஸ்களில் கொருக்கை   என்னும்  இடத்தில் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

24.    ஸ்ரீ   யமன் சதயம்  நட்சத்திரத்த்ன் அதிதேவதை

 ஓம் சம் சதயம் ஸ்ரீ சர்பசயனப்பெருமாள்   ஸ்ரீ  எமன் பகவான்  தேவாய நமஹ

 சதயம்   இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்

  திருப்புகலூர்

அருள் மிகு  அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில்

திருவாரூர்  மாவட்டம்  நன்னிலத்திலிருந்து  நாகப்பட்டினம்  செல்லும்  வழியில்  10 கி.மீ. தொலைவில்  திருப்புகலூர்  என்னும்  ஊரில்  இத்தலம் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

25.     ஸ்ரீ குபேரன் பூரட்டாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை 

ஓம் பூம்  பூரட்டாதி  ஸ்ரீ சித்தர குபதர் ஸ்ரீ குபேரபகவான் தேவாய நமஹ


 பூரட்டாதி  இந்த  நட்சத்திரம் அவதரித்த  ஸ்தலம்

  ரங்கநாதபுரம்

அருள் மிகு திருவானேஸ்வரர் திருக்கோவில்

திருவையாரிலிருந்து  17 கி.மீ. தூரத்திலுள்ள  திருக்காட்டுப்பள்ளி சென்று  அங்கிருந்து   அகரப்பேட்டை  செல்லும் ரோட்டில்  2 கி.மீ. தூரம் சென்றால்  ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

26.      ஸ்ரீ  காமதேனு  உத்திரட்டாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஓம் உம் உத்திரட்டாதி  ஸ்ரீ சனி பகவான்  ஸ்ரீ காமதேனு தேவாய நமஹ

 உத்திரட்டாதி  இந்த  நட்சத்திரம்ன்   அவதரித்த ஸ்தலம்

 தீயத்தூர்

அருள் மிகு  சகஸ்ரலட்சுமீஸ்வரர்  திருக்கோவில்

புதுக்கோட்டயிலிருந்து  40 கி.மீ.  தூரத்திலுள்ள   ஆவுடையார்   கோவில் சென்று,  அங்கிருந்து   திருப்புவனவாசல்  செல்லும்  வழியில்  21 கி.மீ.   தூரத்தில் தீயத்தூர்  உள்ளது.  மதுரையிலிருந்து   செல்பவர்கள்  அறந்தாங்கி  சென்று  அங்கிருந்து  திருப்புவனவாசல்  செல்லும்  பஸ்களில்  சென்றால்  தீயத்தூர்  என்னும்  இடத்தில்  உள்ளது.  தூரம்  120 கி.மீ.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

27.    ஸ்ரீ சனீஸ்வரன்  ரேவதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை

ஒம் ரேம் ரேவதி ஸ்ரீ சோமஸ்கந்தர் ஸ்ரீ சனீஸ்வரர் தேவாய நமஹ

ரேவதி இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்

     காருகுடி

அருள் மிகு   கைலாசநாதர் திருகோவில்

திருச்சியிலிருந்து  முசிறி  40 கி.மீ.  சென்று   முசிறியிலிருந்து  வேறு  பஸ்களில்   தாத்தாயங்கர்பேட்டை [21 கி.மீ.]  செல்ல வேண்டும்.  இங்கிருந்து   5 கி.மீ.  தூரத்தில் உள்ள  காருகுடி  என்னும் இடத்தில் உள்ளது.

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

No comments:

Post a Comment