ஶ்ரீராமஜெயம் 🙏
பஞ்சாகத்தில் வரும் கரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம்
கரணம் என்றால் என்ன..?
முழு விவரம்.....
கரணம் என்பது ஒரு திதியில் பாதியாகும். ஆறு பாகை கொண்டது ஒரு கரணம். ஒரு ராசி மண்டலம்., அதாவது பன்னிரண்டு ராசி சேர்ந்து 360 பாகை கொண்டது. இரண்டு கரணம் சேர்ந்து ஒரு திதி யாகும்.
கரணம் மொத்தம் பதினொன்று
01. பவம்
02.பாலவம்
03.கௌலவம்
04. தைதுளை
05. கரசை
06. வணிஜை
07. பத்திரை
08. சகுனி
09. சதுஷ்பாதம்
10. நாகவம்
11. கிம்ஸ்துக்னம்
இவற்றில் அமாவாசை மறு நாள் வரும் பிரதமை திதியின் பின் பாதியில் பவ கரணம் ஆரம்பிக்கும்.
துதியை திதிக்கு பாலவ, கௌலவ கரணம்களும்.,
திரிதியை திதிக்கு தைதுளை., கரசை கரணம்களும்.,
சதுர்த்தி திதியில் வணிஜை., பத்திரை கரணம்களும்.,
பஞ்சமி திதிக்கு மீண்டும் பவ., பாலவ கரணம்களும்.,
இப்படி சுழற்சி முறையில் 7 கரணம்களும் வரும்.
மீதம் உள்ள நான்கு கரணம்களும் சகுனி கரணம் தேய்பிறை சதுற்தசி
பிற்பாதியில் வரும்.
சதுஷ்பாதம்., நாகவம் ஆகிய கரணம்கள் அமாவாஸை
முன்பாதி., பிற்பாதில் வரும்.
கிம்ஸ்துக்னம் வளர் பிறை பிரதமை பின் பாதியில் வரும் .
இந்த நான்கு கரணமும் இந்த நான்கு இடத்தில் மட்டும் வரும். மற்ற 7ம் மாறி மாறி வரும்.
*சுப கரணம் - பவம்., பாலவம்.,கௌலவம்., தைதுளை., கரசை.*
*அசுப கரணம் - வணிஜை., பத்திரை., சகுனி., சதுஸ்பாதம்., நாகவம்.,கிம்ஸ்துக்னம்.*
ஓம் நமோ நாராயணாய 🙏
No comments:
Post a Comment