*கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.*
--------------------------------------------------------
1. பொருட்படுத்தாதீர்கள்.
----------------------------------
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
--------------------------------------------------------
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
-------------------------------------------------------
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
-------------------------------------------------------
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.✍🏼🌹
*தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.*
வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.
வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.
வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.
ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.
வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.
பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
“முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.
துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.
நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.
மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது
கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.
மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது.
சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.
*நம்புங்கள் உங்களை*
No comments:
Post a Comment