Tuesday, March 23, 2021

 💥🌷ஓம் சக்தி ஆதிபராசக்தி🌷💥


*,🌷வட்டில் இருக்கும் பெண்கள் குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தாலே போதும். எப்பேர்பட்ட

  குல தெய்வ குத்தமும் நீங்கும்.*🌷


🔥*குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்.*

*குலதெய்வமே நமக்கு முதல் தெய்வம்.!🔥


🔷🔶🔹🔹◽️◽️◽️🔹🔹🔶🔷

     

எவ்வளவு பெரிய குல தெய்வ குத்தம் நம்முடைய குடும்பத்திற்கு இருந்தாலும், அதன் மூலம் நமக்கு பேராபத்துகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 


எந்த குலதெய்வமும் தன்னுடைய, பக்தர்களுக்கு கோபத்தால் தண்டனையை கொடுக்காது. ‌அதாவது குல தெய்வம் தன்னை நினைவு படுத்துவற்க்காக, பக்தர்களுக்கு பல சோதனைகளை கொடுக்கும். 


🕉️☘️🌹🌻🔷🔥🔷🌻🌹☘️🕉️


அந்த சோதனை சமயத்தில் நிச்சயமாக நம்முடைய குல தெய்வத்தை நாம் நினைத்துக் கொள்வோம் அல்லவா? அதற்காகத் தான். குலதெய்வத்தை எவரொருவர் நினைவுகூர்ந்து வழிபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ, அவர்களுடைய வீட்டில் நிச்சயம் கஷ்டமும் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்ற கருத்தை ஆழமாக வைத்து இந்த பதிவினை தொடங்குவோம்.


🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳


நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். 

ஏதாவது ஒரு வகையில் அசுப தீட்டுகள் உங்களை குலதெய்வ கோவிலுக்கு செல்லாமல் தடுக்கின்றது என்றாலும், இல்லை நீங்கள் குலதெய்வம் இருக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் வசிப்பவர்கள் ஆக இருந்தால், வீட்டிலிருந்தபடியே பெண்கள் குலதெய்வத்தை வேண்டி எப்படி பூஜை செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀


குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்து உங்களுடைய வீட்டில் கஷ்டம் இருந்தாலும், இந்த பூஜையை நீங்கள் தினசரி உங்களுடைய வீட்டில் செய்யலாம். தவறு கிடையாது. 

முதலில் பச்சரிசியை வாங்கி மாவாக அரைத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். கடையில் வாங்கிய பச்சரிசி மாவை பயன்படுத்துவதை விட, நீங்களே அரைத்த பச்சரிசி மாவு பூஜைக்கு உகந்தது.


💢♻️💢♻️🔹🔔🔹♻️💢♻️💢


அடுத்தபடியாக பூஜைக்கு தயாராகுவோம். ஒரு சிறிய தட்டில் பச்சரிசியை பரப்பி, அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றவேண்டும். கட்டாயம் எல்லார் வீட்டு பூஜை அறையிலும் அவரவருடைய குலதெய்வத்தின் திருவுருவப் படம் இருக்கும். 


⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂⚂


குலதெய்வத்தின் திருவுருவப் படம் இல்லாதவர்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து மஞ்சள் பிடித்து வழிபடலாம்...

தீபத்தின் அருகில் வைத்துவிட்டு அந்த படத்திற்கு முன்பாக, உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை பச்சரிசி மாவால் எழுதவேண்டும். கோலம் போடுவது போல எழுத வேண்டும்.


🔥💥🌟💫❄️🌊❄️💫🌟💥🔥


உங்களுடைய குலதெய்வம் அய்யனார் ஆக இருந்தால், ‘ஓம் அய்யனாரே துணை’ என்று எழுத வேண்டும்.


உங்களுடைய குலதெய்வம் சாஸ்தா ஆக இருந்தால் 'ஓம் குல சாஸ்தாவே துணை' என்று எழுத வேண்டும். 

உங்களுடைய குலதெய்வம் பெருமாளாக இருந்தால் ‘பெருமாள் துணை’ என்று எழுதிக் கொள்ளுங்கள். முருகர் ஆக இருந்தால் ‘முருகனே துணை’ என்று எழுதிக் கொள்ளுங்கள். அம்மனாக இருந்தால் தாயே துணை என்று எழுதிக்கொள்ளுங்கள்...


⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄⚄


இந்து தர்மத்தை பொருத்தவரைக்கும் அனைவருக்கும் குலதெய்வம் இருக்கும்.

குலதெய்வமே அனைவருக்கும் முதல் தெய்வம். எனவே அவரவர் குல தெய்வத்தின் பெயர்களை


இப்படி எழுதி விட்டு உங்களுடைய குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு தீப ஆராதனை காட்டி மனதார உங்களது குலதெய்வம், உங்கள் குலத்தை, காக்க வேண்டும், 


அறிந்தும் அறியாமல் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பெண்கள் வேண்டிக்கொண்டால் வீட்டில் இருக்கும் தீராத பிரச்சினைகளுக்குக் கூட சீக்கிரமே விடிவுகாலம் பிறந்துவிடும்.


🍎🍏🍋🥥🍇🥭🍑🫐🥭🍇🍓


தினமும் இறைவனின் பெயரை புதியதாக எழுத வேண்டும். பழைய பச்சரிசி மாவை, பூஜை அறையில் இருந்து எடுத்து கால் படாத இடத்தில் ஈ எறும்புகள் சாப்பிட போட்டு விடுங்கள்.


குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பினும், அதனால் பெரிய பாதிப்புகள் உங்களுடைய குடும்பத்திற்கு வராது. 


🌐🌀💠♨️💢♨️💠🌀🌐


உங்கள் குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையை செய்தால் உங்கள் வீட்டில் இருந்து வரும் தீராத பிரச்சனை, தீராத கலக்கம், தீராத துன்பம், சுபகாரியத் தடைகள் அனைத்தும் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். 


🟣🔵🟢🟠🟡⚪️🟡🟠🟢🔵🟣


குல தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, இந்த பரிகாரத்தை செய்து எல்லோரும் பலனடைய வேண்டும், என்று வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.


🔥💥🌟💫❄️🌊❄️💫🌟💥🔥


*குலதெய்வத்தின் வழிபாடுகள்...*


*மீண்டும் தொடரும்...*✨


🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

      *┈┉┅━❀•━┅┉┈*


⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃⚃

*என்றும் இறைபணியில்...*

No comments:

Post a Comment