*ம்ருத்யுஞ்ஜய மந்திரம்..!*
மிகவும் சக்தி வாய்ந்த மந்திரத்தையும் அதன் பொருளையும் பலனையும் பார்ப்போம்....
இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும் யஜூர் வேதத்திலும் காணப்படுகிறது.
இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் !
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் !!
சொற்பொருள்:-
ஓம் = ஓம்;
த்ரயம்பகம் = முக்கண்ணுடையவரே; யஜாமஹே = நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம்;
சுகந்திம் = நறுமணமும் (எல்லா வளமும்); புஷ்டி = ஊட்டமும் (எல்லா நலமும்); வர்த்தனம் = பெருகும்படியாகச் செய்பவரே;
உர்வாருகம் = வெள்ளரிப்பழம்;
இவ = போல;
ம்ருத்யோர் = (என்னை) இறப்பின்;
பந்தனாத் = பிடியிலிருந்து;
முக்ஷீய = விடுவித்து;
மா = எனக்கு;
அம்ருதாத் = இறவாமையை அருளும்.
மந்திரத்தின் பொருள்:-
ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.
தீராதநோய், பயம்,கண்டங்கள்,விலக தினம் 108முறை ஜெபிக்க வேண்டும். மிக மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும்.
No comments:
Post a Comment