(தெரிந்து கொள்ளலாமா?..)
(தர்ம சாஸ்திரம்..)
(பகுதி −11..)
141. தாயாரைத் தவிர, மற்ற பெண்களுக்கு அபிவாதனம் சொல்லக் கூடாது.
142. ஈர வஸ்திரத்துடன் இருப்பவர்களையும், படுத்துக்கொண்டு இருப்பவர்களையும்
நமஸ்கரிக்கக் கூடாது.
143. சந்யாசிகளுக்கு அபிவாதனம் சொல்லத் தேவையில்லை.
144. வயதில் சிறியவர்களை வணங்கக் கூடாது.
145. பெரியவர்கள் கூட்டமாக இருக்குமிடத்திலும், யாகநெருப்பின் முன்பும், கோயிலிலும், ஆறுகளின் முன்பும், அரசமரத்தின் முன்பும் அபிவாதனம் சொல்லத் தேவையில்லை. வெறும் நமஸ்காரமே போதுமானது.
146. தாய் தந்தையர் இறந்து ஒரு வருடம் வரையிலும் சுபகாரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
147. இரண்டு அமாவாசைகள் ஒரே மாதத்தில் வந்தால் அது "அதிக மாசம்" எனப்படும்.
அந்த மாதத்தில் சுபகாரியங்கள் விலக்கப்பட வேண்டும்.
148. அக்னிநட்சத்திர சமயத்தில் பூமி பூஜை, க்ருஹப்ரவேசம், கிணறு வெட்டுதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
149. ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு கட்ட ஆரம்பிக்கவோ, குடிபுகுவதோ செய்யக் கூடாது.
150. சகோதரர்களுக்கு ஒரே நேரத்தில் உபநயனம் செய்யக் கூடாது.
151. வைகாசி அமாவாசையிலிருந்து ஆனி அமாவாசைவரை உள்ள காலம், "ஜ்யேஷ்ட மாதம்" எனப்படும். இந்தக் காலத்தில் மூத்த பெண்ணுக்கோ, மூத்த மகனுக்கோ திருமணம் செய்யக் கூடாது.
152. ஸ்ரார்த்தம், மாஸிகம் வருகின்ற தினங்களில் பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ திருமணம் செய்யக் கூடாது.
153. பெண்ணுக்கு "ருது சாந்தி" என்கிற சடங்கை அமாவாசையிலும், பவுர்ணமி தினங்களிலும் செய்யக் கூடாது.
154. தம்பதிகள் நைலான், ப்ளாஸ்டிக் ஒயர்களால் ஆன பாயில் அமருவதை அனுமதிக்கக் கூடாது.
புல்லினால் செய்யப்பட்ட பாயை மட்டுமே அவர்கள் உபயோகிக்க வேண்டும்.
155. தத்து வந்து விட்டாலும் ஒரு ஆண் தனது பூர்வ கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது.
(வளரும்..)
No comments:
Post a Comment