Monday, March 22, 2021


 அஷ்ட லிங்கங்கள்


        நினைத்தாலே முக்தி தரும்  திருவண்ணாமலையில் பதினான்கு கி.மீ சுற்றளவு உள்ள கிரிவலப் பாதையில் *அஷ்ட லிங்கங்கள்* பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவை


1) *இந்திரலிங்கம்* இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  இவரை முதலில் வணங்கிய பின்னரே கிரிவலம் ஆரம்பிக்க வேண்டும். தொடர்புடைய கிரகங்கள் சூரியன் சுக்கிரன். 


2) *அக்னி லிங்கம்* அக்னி பகவான் பிரதிஷ்டை செய்த அக்னி லிங்கம் தொடர்புடைய கிரகம் சந்திரன். 


3) *எம லிங்கம்* எமதர்மன் பிரதிஷ்டை செய்த லிங்கம். செவ்வாய் இதனுடைய கிரகம்


 4) *நிருதி லிங்கம்* நிருதி ஸ்தாபித்த இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் ராகு. 


5) *வருண லிங்கம்* வருண பகவான் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திற்கு தொடர்புடைய கிரகம் சனி. 


6) *வாயு லிங்கம்* வாயு பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் கேது.


 7) *குபேர லிங்கம்* குபேரன் ஸ்தாபித்த இந்த லிங்கத்தின் தொடர்புடைய கிரகம் குரு. 


8) *ஈசான்ய லிங்கம்* ஈசானன் ஸ்தாபித்த இந்த லிங்கத்திற்கு தொடர்புடைய கிரகம் புதன். சுடுகாட்டில். உள்ள இந்த எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கத்தை தரிசித்து அண்ணாமலை கோவிலுக்குள் சென்று நந்தியை முதலில் வணங்கி  இறைவனையும் இறைவியையும் தரிசித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். *திருச்சிற்றம்பலம்*


No comments:

Post a Comment