Thursday, March 4, 2021

 (தெரிந்து கொள்ளலாமா?..,)

(தர்ம சாஸ்திரம்..)

(ஆசிரியர் − திரு. V. ராஜகோபால கனபாடிகள்..)

(பகுதி −5..)

51. அந்தி வேளையிலும், அர்த்த இராத்திரியிலும் உணவருந்தக் கூடாது. 

52. தலையை விரித்துப் போட்டுக்கொண்டு உணவருந்தக் கூடாது.

ஈர வஸ்திரத்துடனும் உணவருந்தக் கூடாது.

53. இருட்டில் அமர்ந்துகொண்டு உணவருந்தக் கூடாது. குறைந்தபட்சம் உணவருந்தும் இடத்தில் ஒரு விளக்காவது எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

54. எள் சாதத்தையும், எள்ளினால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் இரவில் சாப்பிடக்கூடாது. 

55. குழுவாக உட்கார்ந்து சாப்பிடும்போது, ருசியான பண்டங்களை அடுத்தவர்க்கு அளிக்காமல் உண்ணக்கூடாது.

56. பாயசம், வடை போன்றவற்றை நைவேத்தியம் செய்துவிட்டு, அடுத்தவர்க்கு அளித்தபிறகே நாம் உண்ண வேண்டும்.

57. பட்டு வஸ்திரங்களோடு உணவருந்தக் கூடாது.

அப்படி ஒருவேளை உணவருந்த நேரிட்டால், பிறகு அவற்றை பூஜை செய்யும்போது பயன்படுத்தக்கூடாது.

58. பூனை முகர்ந்த உணவை உண்ணக்கூடாது. அப்படி உண்டால், அது தரித்திரத்தை வரவழைக்கும்.

59. தர்ப்பையால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்துகொண்டு, தண்ணீரோ இதர பானங்களோ பருகக்கூடாது.

60. மிகுந்த காரத்தை உணவில் சேர்க்கக்கூடாது. இது "ரஜோ" குணத்தை அதிகரிக்கும்.

61. சன்யாசிகள் சாப்பிட்ட உணவை உண்ணக்கூடாது.

62. திருமணமானவர்கள் தாமரை இலையில் உண்ணக்கூடாது.

63.உறங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களைத் தட்டி எழுப்பக்கூடாது.

64. படுக்கைகளை நோயாளிகளுடன் பங்குபோட்டுக் கொள்ளக்கூடாது.

65. உறங்கும்போது வலதுபுறம் திரும்பிப் படுக்காமல், இடது புறமாகவே திரும்பிப் படுக்க வேண்டும்..

(வளரும்..)

No comments:

Post a Comment