வெற்றிலை, பாக்கு இவற்றின்
பயன்களைப் பார்ப்போம்.
1)-வெற்றிலையை எண்ணெயில் நனைத்து
விளக்கு நெருப்பில் வாட்டி மார்பின் மேல் போட
இருமல், மூச்சு முட்டல், கடினமான சுவாசம் இவை
குணமாகும்.
2)-தீப்பட்டப் புண்ணின் மீது வைத்துக் கட்டலாம்.
3)-வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சி சாற்றையும்
கலந்து குடுத்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்
குணமாகும்.
4)-பெண்களுக்குப் பால் சுரக்கவும் பால் கட்டிக்
கொண்டு ஏற்படும் வீக்கத்தைக் கரைக்க வெற்றி
லையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து
கட்டலாம்.
5)-வெற்றிலைக் கொடியின் வேரைச் சுவைத்தால்
பாடுவோரின் குரல் உயர்வாக ஒலிக்கும்.
பாக்கைப் பற்றிப் பார்ப்போம்.
××××××××××××××××××××××××××
பல்லீறுக்கு உறுதியை உண்டு பண்ணும்.
வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பு இவற்றால்
வாய்க்கு நறுமணத்தை உண்டாக்கும்.
உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகும்.
பாக்கை வறுத்து பொட்யாக்கிக் கொள்ள
வேண்டும். பின்பு இதனுடன் காய்ச்சுக்கட்டி,இந்துப்பு,
ஓமம், படிகாரம் சேர்த்துப் பொடி செய்துக்
கொள்ள வேண்டும். இப்பொடி பல்லுக்கு
பலவித பலனைத் தரும்.
வாழ்க வளத்துடன்.
பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்?
பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்?
யாருக்காகச் செய்ய வேண்டும்? அதற்கான 10 அம்சங்கள் வருமாறு:-
1. நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது ஒன்றும் பேசாதீர்கள். கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள்.
2. பிறகு இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் உள்ளதைக் கடவுளிடம் சொல்லுங்கள்.
3. பஸ்சில் பயணம் செய்யும் பொழுதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதும், கடவுள் உங்கள் எதிரே உட்கார்ந்திருப்பதாகப் பாவனை செய்து கொண்டு, குட்டிப் பிரார்த்தனைகளை அடிக்கடி செய்யுங்கள்.
4. எப்போதும் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிராதீர்கள். கடவுள் ஏற்கனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.
5. உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்குக் கடவுளின் அன்பையும், பாதுகாப்பையும்சம் பாதித்துக் தரும் என்று நம்புங்கள்.
6. பிரார்த்தனையின் போது கசப்புணர்ச்சியும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.
7. கடவுளிடம் கேட்க வேண்டியதைத் கேளுங்கள். ஆனால், அவர் கொடுப்பதைப்பெற்றுக் கொள்ளத் தயராக இருங்கள். நீங்கள் கேட்டவைகளைவிட அவர் கொடுத்தும், கொடுப்பதும் சிறந்ததாகவே இருக்கும்.
8. ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும், தராததும் அவர் விருப்பம்.
9. உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரியாக நடத்தாதவர்களும், நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய்யுங்கள். ஆன்மிக சக்தியின் முதல் விரோதி வெறுப்புணர்ச்சி, என்பதை உணருங்கள்.
10. யார் யாருடைய நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். எவ்வளவு அதிகமான பேருக்கு, குறிப்பாக சம்பந்தப்படாதவர்களுக்கும் பிரார்த்தனை செய்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.
இவை எல்லாவற்றையும் விட மற்றவர்களுக்கு நன்மை நினைப்பதுவே மிகப்பெரிய பிரார்த்தனையாகும் !!
வாழ்க வளமுடன் !!!
ஓம் சிவாய நமஹ
சிவ சிவாய நமஹ....
No comments:
Post a Comment