Thursday, March 4, 2021

(தெரிந்து கொள்ளலாமா?..)


(தர்ம சாஸ்திரம்..)


(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..).


(பகுதி −9..)


111. ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.


112. கொட்டாவி விடும் போது வாயைக் கையினால் மூடவேண்டும்..அல்லது விரல்களால் சொடுக்குப் போடவேண்டும்.


113. வாயினால் ஊதி நெருப்பை (விளக்கை) அணைக்கக்கூடாது..


எந்த சாப்பிடும் பொருளையும் (உ.ம்.. கொதிக்கின்ற பால், பானங்கள்...) வாயினால் ஊதக்கூடாது. அப்படி ஊதினால் அது உச்சிஷ்டமாகக் (எச்சிலாக) கருதப்படும்.


114. கைகளைப் பின்புறமாகக் (முதுகுக்குப்பின்னே) கட்டக்கூடாது.


115. நெருப்பின் மேல் கைகளையும் கால்களையும் காட்டி சூடேற்றிக் கொள்ளக்கூடாது.


116. நகங்களைக் கடிக்கக் கூடாது.


117. திருக்கோயில்களின் முன்பும், நதிகளின் முன்பும், அரச மரத்தின் முன்பும் ஆத்ம ப்ரதக்ஷிணம் செய்யக்கூடாது.


118. தனக்கான மாலையைத் தானே கட்டக் கூடாது.


119. நம்நிழலை எண்ணெயிலோ, நீரிலோ பார்க்கக்கூடாது.


120. குரு −சிஷ்யன், நந்தி −சிவன், தந்தை−மகன், சகோதரர்கள், சகோதரிகள், பசு−கன்று, கணவன் −மனைவி இவர்களின் குறுக்கே போகக்கூடாது.


121. வெற்று உடலுடன், காலைநேர வெயிலில் நிற்கக்கூடாது. இது ஆயுளைக் குறைக்கும்.


122. பிச்சைக்காரர்களை விரட்ட, அவர்கள் முகத்தில் அடிப்பதுபோல கதவைச் சாத்தக்கூடாது.


123. கஷ்டம் வந்தபோது, தூய்மையற்ற வார்த்தைகளைப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.


124. (1) சொத்து விபரங்கள்,

(2) வயது, (3) வீட்டில் நடக்கின்ற நிகழ்வுகள், (4) உபதேச மந்திரம்,

(5) வியாதிக்கு உண்கின்ற மருந்து (6) கிடைத்த விருது/அவமானம் இவற்றைத் தகுந்த காரணங்கள் இன்றி, அடுத்தவரிடம் பகரக்கூடாது.


125. தலைமுடி, நகம் போன்றவற்றை உடனேயே வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும். அவற்றை வீட்டிலேயே வைத்திருக்கக்கூடாது.


(வளரும்..) 

No comments:

Post a Comment