கோயிலுக்குச்_சென்றால்
தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு.
நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை.
சக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ஆண்கள் தங்களின் உடலில் 8 உறுப்புகள் தரையில் படும்படியாகவும் பெண்கள் 5 உறுப்புகள் படும்படியாகவும் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் யோகாசனத்தில் முக்கிய நிலையாகும். நாம் இந்த யோகாசனத்தை அனுதினமும் வழக்கத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தரையில் விழுந்து வணங்குவதை நம்முடைய கலாச்சாரமாக கொண்டுள்ளோம்.
அறிவியல் ரீதியாக காரணம் இருக்கும் அதேசமயத்தில் பெற்றோர்களின் காலில் விழுந்து அவர்களின் ஆசீர்வாதத்தை என்றுமே பெற்றுக் கொள்ளும் நன் மக்களாகவும் இருப்பதை உறுதி செய்வோம்.
No comments:
Post a Comment