Tuesday, March 9, 2021

 *மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும்!*


ஒவ்வொரு மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு உள்ள தெய்வீக சக்திகள் குறித்து இங்கு காண்போம்

துளசி

துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்குப் பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

சந்தன மரம்

சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன.


இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

அத்திமரம்

அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாகக் கைகூடும்.

மாமரம்

மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாகக் கட்டி தொங்க விடப்படுகிறது.

அரசமரம்

அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.

ஆலமரம்

ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாகக் கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மைக் குறைவை நீக்கும் தன்மையுடையது.

மருதாணி மரம்

மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களைத் தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.

ருத்ராஷ மரம்

ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.

ஷர்ப்பகந்தி

இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டிக் கொண்டால் பாம்புகள் தீண்டாது.

நெல்லி மரம்

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.

வில்வமரம்

வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

வேப்பமரம்

வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தைச் சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள ஆடைகளைக் கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வரச் சக்தியின் அருள் கிட்டும்.

கருவேலமரம்

கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிப்படுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாகப் பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீது தான் குடியிருக்கும்.

காட்டு வேம்பு மரம்

காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணு அம்சம் எனக் கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.

அசோக மரம்

அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.

புளியமரம்

புளியமரம் தீய அதிர்வுகளை வெளிப்படுத்தும். புளியமரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளியமரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.

மாதுளம் மரம்

மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழே விளக்கேற்றி தம்பதிகளால் வலம் வரத் தம்பதிகளிடையே அன்னியோன்னியம் ஏற்படும்.


                                                     *****************


கருடனை எந்த கிழமையில் தரிசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் ?. :*

#########₹####################

பறவைகள் அனைத்திற்கும் அரசனாக விளங்கும் கருடன் மங்கள வடிவமாக கருதப்படுகிறார். கருடன் திருமாலின் வாகனத்திற்கு உரியவர். கருடன் காசிபர் – கத்ரு தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். கருடன் அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமைகள் இவரையே சேரும். விஷ்ணுவின் வாகனமாக கருடர் இருப்பதால் பெரிய திருவடி என்றும் மற்றொரு பெயரால் அழைத்து வருகிறார்கள்.

கருடன் வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேசன் என்பவரை இடது கால் நகங்களிலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், கழுத்தின் பின்புறத்தில் குளிகனையை அணிந்திருப்பவர் கருடர் ஆவார். ஒருவருக்கு பாம்பு கடித்து விஷங்கள் அதிகரித்தால் கூட கருட வித்தியா மந்திரங்களை சொல்வதன் மூலம் விஷ முறிவு ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.

பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கருடனை வழிபாடு செய்த பிறகே கோவிலின் மூலவரை வழிபடுதல் வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் நடக்கும் அனைத்து கும்பாபிஷேகங்களில் கருடன் வந்தால் மட்டுமே கும்பாபிஷேகம் பூர்த்தி நிலையை அடைகிறது. இத்தனை பெருமைகள் வாய்ந்த கருடனை எந்த கிழமையில் தரிசனம் செய்து வந்தால் என்ன பலன் என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

ஞாயிற்றுக் கிழமையில் கருடரை தரிசனம் செய்து வந்தால் தீராத நோய்கள் குணமாகும். மருத்துவ செலவுகள் குறையும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி நல்ல தெளிவு கிடைக்கும்.

திங்கள் கிழமையில் கருடனை தரிசனம் செய்வதால் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடம் இருக்கும் மனஸ்தாபங்கள் நீங்கும்.

செவ்வாய் கிழமையில் கருடனை தரிசனம் செய்து வருவதன் மூலம் மனதில் உள்ள பயம் நீங்கி தைரிய மனநிலை வரும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும்.

புதன் கிழமைகளில் கருட தரிசனம் மேற்கொள்வதினால் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் அனைவரும் அழிந்துவிடுவார்கள். எதிரிகள் இல்லாத நிலை உருவாகும்.

வியாழக் கிழமையில் கருடனை தரிசனம் செய்து வந்தால் கண்டங்கள் நீங்கி ஆயுட்காலம் அதிகரிக்கும்.

வெள்ளி கிழமையில் கருட தரிசனம் செய்வதால் தீராத கடன் தொல்லைகள் நீங்கும். வீட்டில் பண வரவுகள் அதிகரிக்கும்.

சனி கிழமையில் கருட தரிசனம் செய்யும் பயனாக நற்கதி அடையும் பாக்கியம் கிடைக்கும்


No comments:

Post a Comment