Tuesday, April 6, 2021


 

ஸ்ரீலஸ்ரீ #மகானந்த #சித்தர் சுவாமிகள்: #மகாதேவமலை.

30 வருடங்களுக்கும் மேலாக நீர், உணவுஇன்றி வாழும் அபூர்வ சித்தர், மகாதேவன் மலை, ஸ்ரீமஹானந்த சித்தர். இவர் இளமையிலேயே இறைவனின் பெயரால் பல தொண்டுகளை மக்களுக்குப் புரிந்தார்.

ஒருநாள் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தோன்றி "நீவிர் பிறவிப் போற்றுத்தவர்". "நீவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழும் பேறு பெற்ற சித்தர்" நீவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக", என்று கூறி மறைந்தார்.

மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார். சில நாட்களுக்குப் பிறகு, இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி "நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது" என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும், இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும்", என்று கூறி இறைவன் மறைந்தார்.

சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.

இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார்.

உயிர் வாழ உணவு இன்றியமையாதது தான் எனினும், உண்ணாமலும், உயிர் வாழ்வது சாத்தியமே; என வாழ்ந்து காட்டிவரும் சித்த புருஷர் "சுவாமி மகானந்தர்", பல ஆண்டுகளாக எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது.

சித்தரும் சித்தவைத்தியமும்:

நம் மகானந்த சித்தர், அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். 

யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப் பெற்றவர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேசாத நிலையினரும் குணம் அடைந்துள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாதோர், மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட சுவாமிகள் அருளால், மலடு நீங்கி மகப்பேறு அடைகின்றனர்.

மகாதேவ மலை சித்தர் அமைவிடம்:

சென்னை-பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு #காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே #குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் மகாதேவ மலைக்கான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரின் அருகில், மகாதேவமலை அடிவாரத்தில் சித்தரைக் காணலாம்.

💐ஓம் நமசிவாய ஓம்🙏🏻

No comments:

Post a Comment