Monday, April 5, 2021


 ஆத்மா, அஞ்ஞானத்தால் மறைக்கப்பட, ஆத்மா செயல்படுவது போல மாயா மனம் செயல்படும்.

முன் வினையின் விளைவாக மனம்

தான் விரும்பும் பொருளை அடைய,

யான், எனது என்கிற அகங்கார மமகாரங்கள் மேலெழும்.


அதனால், மேன்மேலும் ஆசைப்பட்டப்

பொருளை அடைய விரும்பும். விசாரணை ஞானத்தால், ஆசைகளை

நீக்குகின்றவரை மனமடங்காது.


மனமானது பொறி புலன்களைப் பயன்படுத்தி அவ்வாறு செயல்படும்.

ஆசையினால் உண்டாகும் விளைவுகளை உணர்ந்து, புலன்களின்

வழியே மனம் வெளி உலகத்திற்குச்

செல்லாதவாறு தடுத்து, அகமுகமாக

இறைவனை நோக்கி மனம் குவிய

வேண்டும். அப்போதுதான், நான் வேறு;

இறைவன் வேறு எனும் பாவனை நீங்கும்.


பாவனா அதீதம் என்பது மனம் இருந்தும் இறந்த நிலை. இந்த மனதை அடக்க என்னதான் முயற்சி செய்தாலும் எளிதில்

அடங்குவதில்லை.


பாழும் மனம், உலகியல் தொடர்புடையவற்றையே நாடுகிறது.

நினைப்பு, மறப்புடன் கூடிய மனம், சுவரில் அறைந்த பந்தினைப்போல,

வெளியுலகத்தை நோக்கியே செல்கிறது.


நினைவுகளே இதற்குக் காரணமாகிறது.

ஆசைப்பட்டவை கிடைக்காதுபோனால்

மனம்விகாரப்படுகிறது.மீண்டும்,மீண்டும்

ஆசைப்பட்டப் பொருளை நோக்கியே

செல்கிறது. கைகூடாதபோது கோபம்

மேலெழுகிறது. பல பிரச்சனைகளைத்

தருகிறது.


ஆதலின், முறையாக மனதை அடக்கும்

எளிய வழியைத் தேடவேண்டும்.


எனது உடலோடு பொருந்தியுள்ள உயிரும், உணர்வும் நீ!

அன்பும், ஊக்கமும், உண்மையும் நீ!

எனது தாயும், தந்தையும், குருவும் நீ!


தனிப்பெருந் தெய்வமும், தவமும் நீ!

பெருமை தரும் செல்வமும்,வாழ்வும்,

நல்ல துணையும் நீ!


மனைவி, மக்களும்,உறவுகளும் நீ!

எனக்குற்ற நண்பனும் நீ! நின்னையே

நம்பியுள்ளேன்.இறைவா! என்னைக்

கைவிட வேண்டாம்.(அருட்பா-ஆறாம் திருமுறை).


எள்ளில் எண்ணெய்போல,

என் தந்தையே! எல்லாப் பொருள்களின் மேலும், கீழும், நடுவிலும் உள்ளவன் நீயே!


உலகும் முழுவதும் முழுமையாய் நிறைந்துள்ளவனும், அவற்றைக் கடந்தும் உள்ளவன் நீயே!


தேனை நுகரும் வண்டுகள் நீங்காத

கொன்றை மலரைச் சூடியவன் நீயே!

மெய்யன்பர்களைத் தானாக அருள் புரிந்து ஆட்கொள்வது போல, என்னையும் தானாக முன்வந்து ஆட்கொள்பவனும் நீயே! (திருவாசகம்.)


No comments:

Post a Comment