Monday, April 5, 2021


 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

திருச்சிற்றம்பலம் 


#ஒன்பது வாய் தோல் பைக்கு - சித்தர் பாடல்...!


ஒன்பது வாய் தோல் பைக்கு ஒரு நாளைப் போலவே


அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே - வன் கழுக்கள்


தத்தி தத்தி சட்டை தட்டி கட்டி பிட்டுக்


கத்திக் குத்தி தின்னக் கண்டு


ஒன்பது வாய் = ஒன்பது வாசல் கொண்ட

தோல் பைக்கு = தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல்

ஒரு நாளைப் போலவே = ஒரு நாளைப் போலவே எல்லா நாளும்

அன்பு வைத்து = அன்பு வைத்து

நெஞ்சே அலைந்தாயே = அலைந்தாயே என் மனமே

வன் கழுக்கள் = வன்மையான கழுகுகள்

தத்தி தத்தி = தத்தி தத்தி கிட்ட வந்து

சட்டை தட்டி = சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து

கட்டி பிட்டுக் = ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு

கத்திக் = கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு

குத்தி = இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து

தின்னக் கண்டு = தின்ன கண்டும்


ஒன்பது வாசல் கொண்ட தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல் ஒரு நாளைப் போலவே எல்லா நாளும் அன்பு வைத்து அலைந்தாயே என் மனமே! வன்மையான கழுகுகள் தத்தி தத்தி கிட்ட வந்து சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து தின்ன கண்டும்


இவ்வாறு அழுகி நாற்றமெடுக்கும் இந்த உடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாவங்களை செய்கிறாயே என்று கண்டிக்கிறார்.


'வீடு வரை உறவு... வீதி வரை மனைவி.....


காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ....


என்று கண்ணதாசனும் பாடி விட்டுச் சென்றுள்ளார்.


கடைசி வரை வருவது நாம் உலகில் செய்த நன்மைகளும் தீமைகளும் என்ற உண்மையை சொல்லி கவிஞர் போய் சேர்ந்து விட்டார்.


திருச்சிற்றம்பலம்

🙌🏾அவனருளாலே👐🏻

🙏🏻🙏🏻

சிவமே தவம்.....

தவமே சிவம்.....

🙏🏻🙏🏻

🙏🏻🙌🏾👐🏻🙏🏻

திருச்சிற்றம்பலம்*

முப்பொழுதும்... *நற்றுணையாவது நமசிவாயவே*


அருள்மிகு அங்கயற்கண்ணி அம்மன் உடனுறை அருள்மிகு சொக்கநாத பெருமான் திருவடிகள் போற்றி போற்றி**

அடியேன் 

ஆலவாயர் அருட்பணி மன்றம்

மதுரை


🔥🌷ஓம்நமசிவாய 🌷🔥


    💖#மனம்


🌳மனம் நேர்மையான ஒழுக்கத்துடன்

தூய்மையான நம்பிக்கை மிக்கதாக இருந்தால்

நாம் கடவுளைத் தேடி ஆலயத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை🌻


💚மனதுடன் நடக்கும் போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை

விழிப்பு நிலையில் மட்டுமல்ல உறக்க நிலையிலும் கூட

மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒரு போதும் நீங்குவதே இல்லை 


நம்மை முழுவதுமாக ஆட்டிப் படைப்பது நம் மனம் தான்

உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைக் கவனியுங்கள்


மனம் எதை எண்ணுகிறதோ மனிதன் அதுவாகவே மாறிவிடுவான் என வேதம் சொல்கிறது

நல்லவற்றை மட்டுமே மனிதன் மனதில் எண்ண வேண்டும்


தெய்வம் விட்டது நல்வழி என்று எப்போதும் நினையுங்கள்

ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்


இறைவனை வணங்கினாலும்,வணங்கா விட்டாலும் எவரையும் ஏமாற்றாமல் நேர்மையாக வாழ்ந்தாலே போதும் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்


மன உறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமானது


அறியாமையில் சிக்கினால் மனம் தடுமாறும்

விழிப்புடன் செயற்பட்டால் மனதை வெல்லலாம்


நோயால் உடல் நலம் குன்றுவது போல 

தீய எண்ணங்களால் மன நலம் குன்றுகிறது


மனதில் கடவுளை  நினைத்து

அறிவு என்ற தீபம் ஏற்றி வைத்திருப்பவர்களின் மனதில் அற்பமான சிந்தனைகள் உட்புகுவதில்லை


மனதில் உண்டாகும் அற்ப சிந்தனைகளை நீக்கினால் மனதில் உள்ள தீய நோய் அகன்று வெளி உலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்


நல்ல உள்ளத்திற்கு நல்லதாகவும்

கெட்ட உள்ளத்திற்கு கெட்டதாகவும்

தெய்வீக சிந்தனை கொண்ட மனதிற்கு தெய்வக் காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது


உள்ளத்தில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே

கல்லான இதயம் கூட கரையும் அன்பு மழையாய் பொழியும் போது


பல சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு நான் நலம் நீ நலமா? என்று எழுதுகிறது நம் விரல்கள்

இது மனித இயல்பு.


வானிலை மாற்றத்தை விட வேகமாக இருக்கும் மனிதனின் மன நிலை


பார்க்கும் அனைத்திலும் கண்கள் ஆசை வைத்தாலும்

மனம் அதில் சிறந்ததைத் தேடித் தான் ஆசை வைக்கிறது


சந்தோஷமும் கவலையும் மாறி மாறி வந்தால் நம் மனது பக்குவப்படும்

சந்தோஷத்தில் ஆடவும் கூடாது

கவலையில் வாடவும் கூடாது


அமைதியாக இருப்பவர்களை கோழைகள் என எண்ணி விடாதீர்கள்

தேவையற்ற வார்த்தைகளை விடாமல் அமைதியாக கடந்து செல்வதற்கு அதிக மன உறுதி தேவை

No comments:

Post a Comment