Thursday, April 26, 2018

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் செய்ய வேண்டியவை.!

வீட்டு மருத்துவம்....!
 
👉 தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
 
👉 வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.
 
👉 வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.
 
👉 மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.
 
👉 கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
 
👉 ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
 
👉 இஞ்சியை சாறு எடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.
 
👉 தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.
 
👉 இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கிவிடும்.
 
👉 காலையில் எழுந்ததும் யோகப் பயிற்சி செய்து பழக வேண்டும்.
 
👉 நன்கு பசியெடுத்த பிறகுதான் சாப்பிட வேண்டும்.
 
👉 தினமும் ஒரு பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
👉 கொதிக்க வைத்த தண்ணீர், நீருடன் கலந்த மோர், உருக்கிய நெய் இவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
👉 முதல் நாள் சமைத்த உணவை அடுத்த நாள் சாப்பிடக்கூடாது.
 
👉 இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.
 
👉 சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடக்க வேண்டும்.
 
👉 சாப்பிட்ட உடன் பகல் பொழுதில் தூங்கக்கூடாது.
 
👉 நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
 
*********************************************************************************
 
 

No comments:

Post a Comment