Friday, April 13, 2018

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் செய்ய வேண்டியவை

                                               வீட்டு மருத்துவம்


தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.
வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.
மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.
கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
இஞ்சியை சாறு எடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.
இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கிவிடும்.
காலையில் எழுந்ததும் யோகப் பயிற்சி செய்து பழக வேண்டும்.
நன்கு பசியெடுத்த பிறகுதான் சாப்பிட வேண்டும்.
தினமும் ஒரு பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொதிக்க வைத்த தண்ணீர், நீருடன் கலந்த மோர், உருக்கிய நெய் இவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல் நாள் சமைத்த உணவை அடுத்த நாள் சாப்பிடக்கூடாது.
இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.
சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடக்க வேண்டும்.
சாப்பிட்ட உடன் பகல் பொழுதில் தூங்கக்கூடாது.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

வாழ்த்துகள்...!

No comments:

Post a Comment