Thursday, April 26, 2018

படித்ததில் பிடித்தது !

உங்கள் கவலையை மறக்க இதை படிங்க...!!
 
 
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற !
 
ராமு ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்... 
 
மேலாளர் : நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..
 
ராமு : சரி சார்.. முயற்சி பண்றேன்..
 
மேலாளர் : இரவு?
 
ராமு : பகல்...
 
மேலாளர் : புதுமை? 
 
ராமு : பழமை..
 
மேலாளர் : வறுமை? 
 
ராமு : செழுமை..
 
மேலாளர் : வெரி குட்... கரெக்டா சொல்றியே ! 
 
ராமு : வெரி பேடு... தப்பா சொல்றியே...
 
மேலாளர் : ஆங்... ம்ம்ம்... ஆக்கல்? 
 
ராமு : அழித்தல்...
 
மேலாளர் : அழகு?
 
ராமு : ஆபத்து..
 
மேலாளர் : தப்பு..
 
ராமு : சரி.... 
 
மேலாளர் : இல்ல தம்பி.. நீங்க சொல்றது தப்பு.. 
 
ராமு : ஆமா அண்ணே! நான் சொல்றது சரி..
 
மேலாளர் : நீங்க கிளம்பலாம்..
 
ராமு : நீங்க இருக்கலாம்...
 
மேலாளர் : போதும்.. வெளியே போப்பா !!! 
 
ராமு : வேணும்.. உள்ளே வாப்பா !!! 
 
மேலாளர் : நிறுத்துடா...
 
ராமு : ஆரம்பிடா..
 
மேலாளர் : ஐயோ கடவுளே!!! என்ன காப்பாத்து!!
 
ராமு : ஆஹா பிசாசே!! இவன கொல்லு...
 
மேலாளர் : யு ஆர் ரிஜக்டேடு...
 
ராமு : ஐ ஆம் செலக்டேடு !
 
மேலாளர் : ?!?!?!.. போதும் நீ செலக்டேடு தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்.. இப்போ நீ போப்பா..
 
ராமு : ரொம்ப தேங்க்ஸ் சார்.. உனக்குள் நான்! எனக்குள் நீ!!
 
Just Smile :)  :happy:  :thumbup: 
 
ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. (இப்பவாவது கொஞ்சம் சிரிங்க ஜி) 
************************************************************************************
 
ஏன் நிலை வாசற்படியில் பெண்கள் அமரக்கூடாது?
 
 
 
🌟 இன்றைய காலத்தில் பெண்கள் நிலைவாசற்படியில் உட்கார்ந்து கொண்டுதான் தலை வாருவார்கள். ஆனால், முன் காலத்தில் வாசற்படியில் பெண்களோ, சிறுவர்களோ குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணோ அமர்ந்திருந்தால், வீட்டில் உள்ள பெரியோர்கள் அவர்களை திட்டுவார்கள். படியில் அமரக்கூடாது என்று உபதேசமும் செய்வார்கள். இப்படியெல்லாம் ஏன் கூறுகிறார்கள் என யோசித்து பார்த்திருக்கிறீர்களா? 
 
அதைப் பற்றி இங்கு காண்போம்.
 
🌟 வீட்டு வாசல் நிலையின் நான்கு பக்கங்களும் சதுரமான வடிவத்தில் உள்ளதால் அந்த இடத்தில் எதிர்மறை சக்திகள் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
 
🌟 நாம் வாசற்படியில் அமர்ந்துள்ள போதோ அல்லது நிற்கும் போதோ நம் உடலில் எதிர்மறை சக்திகள் புகுந்து விடும் என்ற காரணத்தினால் தான் அவ்வாறு கூறியுள்ளனர்.
 
🌟 இதனாலேயே யாராவது வாசற்படிக்கு வெளியே நின்று கொடுத்தாலும் அல்லது வாங்கினாலும் அவர்களை உள்ளேயே வந்து வாங்கிச் செல்லக் கூறுகிறோம்.
 
🌟 வாசற்படிக்கு அடியில் நின்று சில விஞ்ஞான கருவிகளைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்தால் வாசற்படிக்கு அடியில் எதிர்மறை சக்திகள் இருப்பதைக் காணலாம்.
 
🌟 இதை அன்றே கண்டு கொண்ட நம் முன்னோர்கள் யாரும் நிலை வாசற்படியில் அமரக்கூடாது என்று கூறினார்கள்.
*************************************************************************************
 
இதை படிச்சா உங்களுக்கு கண்டிப்பா சிரிப்பு வரும்..!!
 
 
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
 
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
 
மறுநாள் அவர் வீட்டு வாசலில் ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. மாமியாரின் அன்புப் பரிசு..
 
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.. மாமியாரின் அன்புப் பரிசாக...
 
மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார கடைசியா பரிதாபமா பார்த்து சொன்னான்... எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கில்ல போயிக்கிறேன்.. பொண்ணா வளர்த்து வச்சிருக்க..? 
 
மாமியார் செத்த மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.. மாமனாரின் அன்புப் பரிசு என்ற அட்டையோட...!
 
Just smile :)  :happy:  :thumbup: 
 
அடிக்குற வெயில்ல வெள்ளைக்காரன் கூட கருப்பாயிடுறான்...
ஆனா...
இந்த வெள்ளை முடி மட்டும் கருப்பாக மாட்டேங்குது...
நம்ம கவலை நமக்கு....!
 
 
ஏன்? ஏன்? ஏன்?
 
குருடர்கள் அதிகமாக கீழே விழுவதில்லை..
ஏன்...????
கண்கள் இல்லையே என்ற விழிப்புணர்வு.
 
கண் பார்வை தெரிந்தவர்கள் தான்
அதிகமாக கீழே விழுகின்றார்கள்.
ஏன்...???
பார்வை தான் இருக்கிறதே,
என்ற அலட்சிய போக்கு.
 
ஆக... விழுவதும்... வீழாமல் இருப்பதும்...
கண்களை பொறுத்தது அல்ல.
 
அது விழிப்புணர்வு என்ற உணர்வை பொறுத்தது.
குருடன் குழியில் விழுவது குற்றமாகாது.
 
பார்வை உள்ளவன் 
 
இரவில் விழுந்த பள்ளத்தில்,
பகலிலும் விழுவது தான் குற்றம்.
***********************************************************************************
இதை நம் முன்னோர்கள் ஏன் கடைபிடித்தார்கள்?
 
 
ஏன் அசைவம் கூடாது....?? 
 
 எல்லா மாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது கட்டாயமா? அதிலும், நம் வீட்டுப் பெரியோர்கள் ஒரு மாதத்திற்கு அசைவம் கட் என்று ஆணியடித்தாற் போல் சொல்லி விடுவார்கள்... 
 
அப்படி என்ன தான் காரணம்? 
 
🍗 புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும் என்பார்கள் (தண்ணீர் இல்லாமல் வளரக்கூடியது). அது கூட காயும் என்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு புரட்டாசியில் வெயில் இருக்கும்.
 
🍗 சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. ஆனால் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் அசைவ உணவை தவிர்த்து விடுகிறார்கள் தெரியுமா?
 
🍗 புரட்டாசி மாதத்தில் பொதுவாக சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கும். அதோடு இந்த மாதத்தில் தான் மழை வர துவங்கும். ஆனால் பூமி குளிரும் படி மழை பெய்யாது.
 
🍗 இதனால் பூமியில் இருந்து அதிக அளவிலான வெப்பம் வெளியில் வரும். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் நாம் அசைவ உணவு உண்பதால் உடம்பில் வெப்பம் அதிகரித்து தேவையற்ற உபாதைகளை தரும். 
 
🍗 புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால், நமது ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் அந்த நேரத்தில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. 
 
🍗 அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.
 
🍗 அது மட்டுமின்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும்.
 
🍗 நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைபிடித்த இதை நாமும் கடைபிடித்து நமது உடலை பாதுகாப்போம்.....!!

  *********************************************************************************

No comments:

Post a Comment